ADDED : மார் 26, 2025 10:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோமனூர்::
சூலூர் வட்டார விவசாயிகளுக்கு மானிய விலையில்,இடு பொருட்களை வேளாண்துறை வழங்குகிறது.
சூலூர் வட்டார வேளாண்துறை அதிகாரிகள் கூறியதாவது: சோமனூரில் உள்ள வேளாண்துறை கிடங்கில் இடுபொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அந்த இடுபொருட்கள், 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
சூடோமோனாஸ் உயிரியல் பூஞ்சாண கொல்லி, டிரைக்கோடெர்மா விரிடி உயிரியல் பூஞ்சாண கொல்லி, வம்பன்- 11 ரக உளுந்து, கோ -8 பயிறு, கம்பு, அசாடிராக்டன் பூச்சி கொல்லி மருந்து, பயிறு வகை நுண்ணூட்டம், சிறுதானிய நுண்ணூட்டம் ஆகிய இடுபொருட்கள் வழங்கப்படுகின்றன. தேவைப்படுவோர், வேளாண் உதவி அலுவலரை, 83001 15900 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.