ADDED : ஜூன் 15, 2026 11:25 PM
கோவை: கலை மற்றும் கைவினைத் தொழிலாளர்களுக்கு, கலைஞர் கைவினைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
கட்டட வேலை, மர வேலைப்பாடு, ஜவுளி அச்சிடுதல், தோல் கைவினைப் பொருட்கள், காலணி தயாரித்தல், சிற்ப வேலைப்பாடு, கண்ணாடி வேலைப்பாடு, பாரம்பரிய இசைக்கருவிகள் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு கலைகளில் ஈடுபடுவோர் இத்திட்டத்தில் பயன் பெறலாம்.
தொழில்திறன் பயிற்சியுடன், ரூ.3 லட்சம் வரை பிணையமில்லா கடன் வழங்கப்படும். கடனில் 25 சதவீதம், அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது. 5 சதவீத வட்டி மானியமும் உண்டு.
35 வயதுக்கு மேற்பட்ட, 5 ஆண்டுகள் தொழில் அனுபவம் கொண்டவர் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் பயன்பெற www.msmeonline.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு ராஜவீதியில் உள்ள மாவட்ட தொழில் மையத்தை அணுகலாம். 89255 33394, 94435 65891 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
