/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மானிய விலையில் மோட்டார்: வேளாண் துறை அழைப்பு
/
மானிய விலையில் மோட்டார்: வேளாண் துறை அழைப்பு
ADDED : மே 12, 2025 11:24 PM
சூலுார்; மானிய விலையில் மோட்டாரை பெற்று பயன் பெற, சூலூர் வட்டார விவசாயிகளுக்கு வேளாண் பொறியியல் துறை அழைப்பு விடுத்துள்ளது.
சூலூர் வட்டார வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் வெங்கடாசலம் அறிக்கை:
புதிதாக உருவாக்கப்பட்ட கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளுக்கு, மானிய விலையில் மின்சார மோட்டார் பம்ப் செட்டுகள், வேளாண் பொறியியல் துறை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. தற்போது, அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கப்படுகிறது. இந்த மானிய மோட்டாரை பெற, வேளாண் அல்லது தோட்டக்கலைத் துறை வாயிலாக சொட்டு நீர் அல்லது தெளிப்பு நீர் பாசனம் அமைத்திருக்க வேண்டும். மோட்டார் தேவைப்படும் விவசாயிகள், 9245465628 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம். மேலும், தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பயிரிடப்படாத தரிசு நிலங்களில், உழவு செய்ய, ஒரு ஏக்கருக்கு, 2 ஆயிரத்து, 500 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு விவசாயிக்கு, அதிகபட்சமாக, ஐந்து ஏக்கர் வரை உழவு மானியம் வழங்கப்படும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.