/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மானிய விலையில் விதை மற்றும் உரம்
/
மானிய விலையில் விதை மற்றும் உரம்
ADDED : ஏப் 14, 2025 05:56 AM
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்கள் மற்றும் விதைகள் வழங்க தயார் நிலையில் உள்ளது.
கிணத்துக்கடவு வட்டாரத்தில், தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம், சிறுதானிய திட்டம் மற்றும் விதை கிராம திட்டத்தின் வாயிலாக, சித்திரைப் பட்டத்திற்கு தேவையான விதை, உரம் விற்கப்படுகிறது.
சோளம் கே.12 ரகம், தட்டை, உளுந்து, கொள்ளு போன்ற விதைகள் மற்றும் நுண்ணூட்ட சத்துக்கள், வேளாண் இடுபொருட்கள் போன்றவைகள் விவசாயிகளுக்கு, 50 சதவிகித மானியத்தில் வழங்க தயார் நிலையில் உள்ளது.
விவசாயிகள் இத்திட்டத்தை பயன்படுத்தி, விதை மற்றும் உரங்களை மானிய விலையில் பெற்று பயனடையலாம், என, கிணத்துக்கடவு வேளாண் உதவி இயக்குனர் அனந்தகுமார் மற்றும் துணை வேளாண் அலுவலர் மோகனசுந்தரம் ஆகியோர் தெரிவித்தனர்.

