தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பண்ணை குட்டை அமைக்க மானியம்

பண்ணை குட்டை அமைக்க மானியம்

பண்ணை குட்டை அமைக்க மானியம்


ADDED : ஜூலை 23, 2025 09:18 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 23, 2025 09:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சூலுார்; தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ், பண்ணை குட்டை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.

தேசிய தோட்டக்கலை இயக்கம் மற்றும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், பண்ணை குட்டை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு பகுதியிலும், நீர் ஆதாரத்தை உருவாக்கும் நோக்கத்தோடு, புதிய பண்ணை குட்டை, 20 மீ., நீளம், 20 மீ., அகலம், மூன்று மீ., ஆழம் என்ற அளவில் அமைக்க வேண்டும். இதற்கு பின்னேற்பு மானியமாக, 75 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் பயன்பெற ஆதார் நகல் குடும்ப அட்டை நகல், சிட்டா, அடங்கல், நில வரைபடம், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன், சூலுார் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.

மேலும், இது தொடர்பாக தகவல்களை பெற, 0422 2990014 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us