/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்னையில் ஊடுபயிர் செய்ய மானியம்
/
தென்னையில் ஊடுபயிர் செய்ய மானியம்
ADDED : ஆக 05, 2025 11:31 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு பகுதியில், தென்னைக்கு ஊடுபயிராக திசு வாழை மற்றும் உயிர் உரங்கள் மானியமாக வழங்கப்படுகிறது.
கிணத்துக்கடவுக்கு உட்பட்ட பகுதியில், 12 ஆயிரம் ஹெக்டேர் அளவில் தென்னை விவசாயம் உள்ளது. இதை மேம்படுத்த தோட்டக்கலை துறை சார்பில், மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் வாயிலாக, தென்னையில் ஊடுபயிர் செய்ய 10 ஆயிரம் மதிப்பிலான திசு வாழை மற்றும் உயிர் உரங்கள் மானியத்தில் (ஒரு ஹெக்டேருக்கு) வழங்கப்படுகிறது.
இதில், பொது பிரிவினருக்கு - 15 ஹெக்டேரும், எஸ்.சி., பிரிவினருக்கு 5 ஹெக்டேர் என மொத்தம் 20 ஹெக்டேருக்கு மானியம் வழங்கப்படுகிறது. கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு, 80 சதவீதம் முன்னுரிமையும், மற்ற கிராமங்களுக்கு, 20 சதவீதம் முன்னுரிமையும் அளிக்கப்படும்.
மேலும், இத்திட்டம் குறித்த ஆலோசனைகளுக்கு கிணத்துக்கடவு தோட்டக்கலைத் துறை அலுவலர்களை தொடர்பு கொள்ள வேண்டும்.இத்தகவலை கிணத்துக்கடவு தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் ஜமுனா தேவி தெரிவித்தார்.