/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேளாண் மதிப்புக்கூட்டு அலகு அமைக்க மானியம்
/
வேளாண் மதிப்புக்கூட்டு அலகு அமைக்க மானியம்
ADDED : அக் 15, 2025 11:45 PM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சுற்று வட்டாரத்தில் வேளாண் விளைபொருட்களுக்கு மதிப்பு கூட்டு அலகு அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.
கிணத்துக்கடவு சுற்று வட்டாரத்தில் மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிப்பதற்காக, வேளாண் வணிகத்துறை சார்பில் தொழில் முனைவோர் மற்றும் நிறுவனங்கள் அமைப்பவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் சிறப்பு மானியத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதில், வேளாண் விளை பொருட்களுக்கான மதிப்பு கூட்டு அலகு அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. முதலீட்டு மானியமாக, பொதுப் பிரிவினருக்கு 25 சதவீதமும், எஸ்.சி., எஸ்.டி., மற்றும் பெண்களுக்கு 35 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது.
மேலும், இத்திட்டத்தில் அதிகபட்ச கடன் தொகையாக, 10 கோடி வரை வழங்கப்படும். மேலும், அதிகபட்சமாக, 1.5 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும். இத்துடன், கூடுதலாக வட்டி மானியம் 5 சதவீதம் வழங்கப்படும். இத்திட்டம் குறித்து விவரங்களுக்கு ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம், வேளாண் வணிக உதவி அலுவலர் சுந்தர்ராஜனை 99424 11566 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என, கோட்ட வேளாண் அலுவலர் ஹில்டா தெரிவித்தார்.