/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோடை உழவுக்கு மானியம்; விவசாயிகளுக்கு அழைப்பு
/
கோடை உழவுக்கு மானியம்; விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : ஏப் 25, 2025 11:25 PM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு வட்டாரத்தில் உள்ள விவசாயிகள், தற்போது கோடை உழவு செய்ய ஆயத்தமாகி வருகின்றனர். கோடை உழவு மேற்கொள்வதால், மானாவாரி விவசாய நிலத்தில் மண் அரிப்பு தடுக்கப்படுகிறது. மண்ணில் உள்ள நுண்ணுயிர் சத்துக்கள் அதிகரிக்கிறது.
தற்போது விவசாயிகளுக்கு, வேளாண் துறை சார்பில், மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் வாயிலாக, கோடை உழவு செய்யும் மானாவாரி விவசாயிகளுக்கு, ஒரு ஏக்கருக்கு, 800 ரூபாய் மானியமாக வழங்கப்பட உள்ளது.
இதில், ஒரு விவசாயிக்கு குறைந்தபட்சம், ஒரு ஏக்கர் முதல் அதிகபட்சமாக 5 ஏக்கர் வரை உழவு செய்து மானியம் பெற்று கொள்ளலாம்.
இத்திட்டத்தில் விவசாயிகள் பயன்பெற, சிட்டா, ஆதார் கார்டு, பேங்க் பாஸ்புக் மற்றும் உழவு செய்யும் புகைப்படம் போன்ற ஆவணங்கள் கொண்டு வந்து, வேளாண் அலுவலகத்தில் பதிவு செய்யலாம். அல்லது உழவன் செயலியில் பதிவு செய்து பயன் பெறலாம்.
இத்தகவலை, கிணத்துக்கடவு வேளாண் உதவி இயக்குனர் (பொறுப்பு) அருள்கவிதா மற்றும் வேளாண் துணை அலுவலர் மோகனசுந்தரம் ஆகியோர் தெரிவித்தனர்.

