/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்னைக்கு மானியம் தோட்டக்கலை அறிவிப்பு
/
தென்னைக்கு மானியம் தோட்டக்கலை அறிவிப்பு
ADDED : அக் 28, 2024 11:40 PM
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு வட்டாரத்தில், 13,160 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை விவசாயம் உள்ளது. தென்னையில் தற்போது தஞ்சாவூர் மற்றும் வேர் வாடல் நோய், தேங்காய் காய்ப்பு திறன் இல்லாத மரம் போன்றவைகளை வெட்டி அகற்றப்படுகிறது.
இதற்கு தோட்டக்கலை துறை சார்பில், தென்னை அபிவிருத்தி திட்டம் 2024 - 25 வாயிலாக நோய் தாக்குதல் ஏற்பட்ட மரத்தை வெட்டி அகற்றம் செய்யவும், தென்னங்கன்று மறு நடவு செய்யவும் மானியம் வழங்கப்படுகிறது.
இதில், ஒரு ஹெக்டேருக்கு அதிகபட்சமாக, 32 மரம் வெட்டுவதற்கு, 32 ஆயிரம் ரூபாய் மற்றும் தென்னங்கன்று மறு நடவு செய்ய, 4 ஆயிரம் ரூபாய் மற்றும் 8,750 ரூபாய்க்கு தென்னைக்கான உரம், இடு பொருள் என மொத்தம், 44,750 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது.
கிணத்துக்கடவு வட்டாரத்தில், 200 ஹெக்டேருக்கு, 89.5 லட்சம் ரூபாய் என ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது வரை, 130 ஹெக்டேருக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள, 70 ஹெக்டேருக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இத்திட்டத்தினை விவசாயிகள் பயன்படுத்தி பயன்பெற வேண்டும். இத்தகவலை, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஜமுனாதேவி தெரிவித்தார்.