தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பருத்தி சாகுபடி மேற்கொள்ள மானியத்தில் இடுபொருட்கள்

பருத்தி சாகுபடி மேற்கொள்ள மானியத்தில் இடுபொருட்கள்

பருத்தி சாகுபடி மேற்கொள்ள மானியத்தில் இடுபொருட்கள்


ADDED : செப் 30, 2024 06:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2024 06:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு வட்டார பருத்தி சாகுபடி விவசாயிகள், மானியத்தில் இடுபொருட்களை பெறலாம், என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிணத்துக்கடவு வேளாண் உதவி இயக்குனர் அனந்தகுமார் மற்றும் துணை வேளாண் அலுவலர் மோகனசுந்தரம் அறிக்கை:

வேளாண் துறையில், மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நடப்பாண்டு, லாபகரமான பருத்தி சாகுபடி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அவ்வகையில், கிணத்துக்கடவு வட்டாரத்தில், விவசாயிகள் பலர், பருத்தி சாகுபடியில் ஆர்வம் காட்டியும் வருகின்றனர்.

விவசாயிகளுக்கு உயிர் உரங்கள், பருத்தி நுண்ணுாட்ட சத்துக்கள் மற்றும் காய் புழுவினை கட்டுப்படுத்த தேவையான உயிர் உயிரியல் காரணிகள் அனைத்தும், 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.

பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு 'ட்ரோன்' வாயிலாக மருந்து தெளிக்க ஒரு ெஹக்டேருக்கு, 1,250 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இதற்காக, கிணத்துக்கடவு வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில், தேவையான அளவு உயிர் உரங்கள், பருத்தி நுண்ணுாட்டச் சத்துக்கள், உயிர் உயிரியல் காரணிகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் இடுபொருட்களை மானியத்தில் பெறுவதற்கு கூகுள்பே, பேடிஎம், போன்பே வாயிலாக பணம் செலுத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், விபரங்களுக்கு, அந்தந்த பகுதி உதவி வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us