sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வீடுகளில் கட்டமைப்பு ஏற்படுத்த மானியம் சோலார் மின் உற்பத்தி! தபால் நிலையங்களில் விண்ணப்பிக்க வசதி

/

வீடுகளில் கட்டமைப்பு ஏற்படுத்த மானியம் சோலார் மின் உற்பத்தி! தபால் நிலையங்களில் விண்ணப்பிக்க வசதி

வீடுகளில் கட்டமைப்பு ஏற்படுத்த மானியம் சோலார் மின் உற்பத்தி! தபால் நிலையங்களில் விண்ணப்பிக்க வசதி

வீடுகளில் கட்டமைப்பு ஏற்படுத்த மானியம் சோலார் மின் உற்பத்தி! தபால் நிலையங்களில் விண்ணப்பிக்க வசதி


ADDED : மார் 03, 2024 12:31 AM

Google News

ADDED : மார் 03, 2024 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி;சோலார் திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், பொள்ளாச்சி தபால் கோட்டத்திற்கு உட்பட்ட தபால் அலுவலகங்களில் பதிவு செய்து கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் வினியோகம் சீராக இல்லாத நிலையில், மாற்று மின் திட்டத்துக்கு மக்கள் மாறி வருகின்றனர். புதிதாக வீடு கட்டுவோர், சோலார் பேனல் அமைத்து, மின் உற்பத்தி செய்யவும், சோலார் வாட்டர் ஹீட்டர் அமைக்கவும் கட்டமைப்புகளை ஏற்படுத்துகின்றனர். சமீப காலமாக, மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் பயன்பாடும் அதிகரித்து வருகிறது.

அரசு திட்டங்களில் வீடு கட்டுவோருக்கு, சோலார் மின் உற்பத்திக்கான உபகரணங்கள் நிறுவிக் கொடுக்கப்படுகிறது. இந்நிலையில், ஏற்கனவே கட்டிய வீடுகளிலும், சோலார் பேனல் அமைத்து, மின் உற்பத்தி செய்து, சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்திக் கொள்ள, மத்திய அரசு மானியம் வழங்குகிறது.

இதற்காக, மத்திய அரசு, சூரிய வீடு; இலவச மின்சாரம் திட்டத்தை செயல்படுத்துகிறது. இத்திட்டத்தின் வாயிலாக, நாடு முழுவதும் ஒரு கோடி வீடுகளில் சூரிய ஒளி மின்சார பேனல்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு அமைக்கப்படும் வீடுகளுக்கு, மாதம் 300 யூனிட் இலவச மின்சாரத்தை அரசு அளிக்கிறது.

குறிப்பாக, இந்த திட்டத்தில் இணைவோர் தங்களுடைய வீடுகளுக்கு தேவையான மின்சாரத்தை பெறுவதுடன், உபரி மின்சாரத்தை மின்வாரியத்துக்கு விற்பனை செய்வதன் வாயிலாக, 15,000 முதல் 18,000 ரூபாய் வரை மிச்சப்படுத்தும் வாய்ப்பு ஏற்படும்.

மின்சார வாகனங்களை சார்ஜ் செய்வதற்கும் உதவும். இத்திட்டத்தில் இணைய விருப்பம் உள்ள பொதுமக்களின் விபரங்களை சேகரிக்கும் பணியை மேற்கொள்ள, தபால் துறையில் பணிபுரியும் அனைத்து தபால்காரர்களையும், மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அவ்வகையில், சோலார் திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், பொள்ளாச்சி தபால் கோட்டத்திற்கு உட்பட்ட தபால் அலுவலகங்களில் பதிவு செய்து கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, கோட்டக் கண்காணிப்பாளர் ஜெயசீலன் அறிக்கை வருமாறு:

மத்திய அரசின் சோலார் திட்டத்திற்கான பயனாளிகள் பதிவு, தபால் அலுவலகங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், ஒரு கிலோவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின் நிலையம் அமைக்க, 30 ஆயிரம் ரூபாய்; 2 கிலோவாட்டிற்கு 60 ஆயிரம் ரூபாய்; 3 கிலோவாட் மற்றும் அதற்கு மேல் சோலார் பேனல் அமைக்க, 78 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்க, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கான பயனாளிகள் பதிவு அனைத்து தபால் நிலையங்களிலும் துவக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், உடனடியாக தங்கள் பகுதி டெலிவரி தபால்காரர்கள், கிராமப்புற தபால் ஊழியர்கள் மற்றும் அருகில் உள்ள தபால் நிலையங்களை அணுகலாம். பதிவு செய்வதற்கு, வரும், 8ம் தேதி கடைசி நாளாகும்.

இவ்வாறு, அறிக்கையில் உள்ளது.

வீடுகளில் சோலார் மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்த, எங்கு விண்ணப்பிப்பது, மானியம் எவ்வளவு என, தெரியாமல் அலைமோதும் மக்களிடையே, தபால் துறையின் இந்த சேவை வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த திட்டத்தில் இணைவோர் தங்களுடைய வீடுகளுக்கு தேவையான மின்சாரத்தை பெறுவதுடன், உபரி மின்சாரத்தை மின்வாரியத்துக்கு விற்பனை செய்வதன் வாயிலாக, 15,000 முதல் 18,000 ரூபாய் வரை மிச்சப்படுத்தும் வாய்ப்பு ஏற்படும்.

பயன்பெற விரும்புவோர், உடனடியாக தங்கள் பகுதி டெலிவரி தபால்காரர்கள், கிராமப்புற தபால் ஊழியர்கள் மற்றும் அருகில் உள்ள தபால் நிலையங்களை அணுகலாம். பதிவு செய்வதற்கு, வரும், 8ம் தேதி கடைசி நாளாகும்.






      Dinamalar
      Follow us