/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தரமற்ற புத்தகப்பை, ஷூ வினியோகம்: பயன்படுத்த தயங்கும் மாணவர்கள்
/
தரமற்ற புத்தகப்பை, ஷூ வினியோகம்: பயன்படுத்த தயங்கும் மாணவர்கள்
தரமற்ற புத்தகப்பை, ஷூ வினியோகம்: பயன்படுத்த தயங்கும் மாணவர்கள்
தரமற்ற புத்தகப்பை, ஷூ வினியோகம்: பயன்படுத்த தயங்கும் மாணவர்கள்
ADDED : அக் 15, 2025 11:50 PM
பொள்ளாச்சி: அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச ஷூ சரியான அளவில் இல்லாததாலும், புத்தகப்பை தரமின்றி இருப்பதாலும், அதனை பயன்படுத்த மாணவர்கள் முன்வருவதில்லை.
அரசு பள்ளி மாணவர்களுக்கு, புத்தகம், நோட்டு உட்பட, 21 வகை இலவச நலத்திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. அதில், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, ஒரு செட் ஷூ, இரண்டு செட் சாக்ஸ்கள், ஒரு புத்தகப்பை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், மாணவர்களின் கால் அளவுக்கு ஏற்ப ஷூ க்கள் இல்லாததால் அவற்றை மாணவர்கள் பயன்படுத்துவதில்லை. இதேபோல, புத்தகப் பையும் தரமின்றி இருப்பதாக, அதனைப் பயன்படுத்தவும் மாணவர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
அப்பொருட்களை பள்ளியிலேயே விட்டுச் செல்கின்றனர். அதற்கு மாற்றாக, விளையாட்டு பயிற்சியில் ஈடுபடும் வகையில், 'டீ சர்ட்', டிராக் பேண்ட் வழங்கலாம் என, ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:
மாணவர்களுக்கு பள்ளி வாரியாக, 6, 7, 8, 9 என, கால் அளவு எடுக்கப்படுகிறது. ஆனால், ஷூக்கள் வினியோகிக்கும் போது எண்ணிக்கை அடிப்படையில், பள்ளிகளுக்கு மொத்தமாக அனுப்பி வைக்கப்படுகிறது.
வரப்பெற்ற ஷூக்களில் இருந்து, அது எந்த அளவாக இருந்தாலும், வேறு வழியின்றி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. கால் அளவுக்கு பொருந்தாவிட்டாலும், தரமின்றி இருப்பதாலும் அவற்றை பயன்படுத்த மாணவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை.
இதேபோல, புத்தகப் பையின் தரம் குறைந்து காணப்படுவதால், அதனையும் பயன்படுத்த தயங்குகின்றனர். வழக்கமாக, ஆண்டுக்கு நான்கு ஜோடி இலவச சீருடை வழங்கப்படுகிறது. அதனுடன் டீ சர்ட், டிராக் பேண்ட் வழங்க திட்டமிடலாம்.
இவ்வாறு, கூறினர்.