/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆள் இறங்கும் குழியில் வெளியேறும் கழிவுநீர்
/
ஆள் இறங்கும் குழியில் வெளியேறும் கழிவுநீர்
ADDED : அக் 15, 2025 11:50 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம், 170.226 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம், ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 7,400 பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதில், ஆங்காங்கே குழிகள் சேதமடைந்து விபத்துகள் ஏற்படுத்தும் மையமாக மாறியுள்ளன. ராஜாமில் ரோட்டில் உள்ள ஆள் இறங்கும் குழியில் இருந்து கழிவுநீர் அதிகளவு வெறியேறி வருவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
பொதுமக்கள் கூறுகையில்,'ராஜாமில் ரோட்டில் உள்ள ஆள் இறங்கும் குழிகள் சேதமடைந்துள்ளன. இதில், அவ்வப்போது கழிவுநீர் வெளியேறி ரோட்டில் வழிந்தோடி, கடைகளுக்கு முன் தேங்கி நிற்கிறது.
இதனால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரம் பாதிக்கிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்,' என்றனர்.