ADDED : அக் 15, 2025 11:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்: அன்னுார் பேரூராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து துப்புரவு ஆய்வாளர் ராஜ்குமார், மேற்பார்வையாளர் பிரதீப் மற்றும் ஊழியர்கள், அன்னுார் மெயின் ரோடு, சத்தி ரோடு அவிநாசி ரோடு பகுதியில் பேக்கரி, மளிகை, ஹோட்டல்களில் சோதனை நடத்தினர்.
இதில் 23 கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் 3 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அபராதம் விதிக்கப்பட்டது.
இரண்டாவது முறை அபராதம் இரட்டிப் பாக்கப்படும். மூன்றாவது முறை கடைக்கு சீல் வைக்கப்படும் என பேரூராட்சி அதிகாரிகள் எச்சரித்தனர்.