/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நவீன வாழ்க்கை முறைக்கு ஏற்ற 'சுக்ராஸ் என்கிளேவ்'
/
நவீன வாழ்க்கை முறைக்கு ஏற்ற 'சுக்ராஸ் என்கிளேவ்'
ADDED : ஜன 24, 2025 11:02 PM

கோவை; கோவையில் சேஷன் ஹோம்ஸ் சார்பில், 'சுக்ராஸ் என்கிளேவ்' என்ற, நவீன வாழ்க்கை முறைக்கேற்ற உயர்தர வீடுகள் அறிமுக விழா, பீளமேடு முருகன் நகரில் நேற்று நடந்தது.
சேஷன் ஹோம்ஸ் இயக்குனர் சுகந்தாமணி ராமச்சந்திரன், குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இயக்குனர் லலிதை வரவேற்றார்.
சேஷன் ஹோம்ஸ் நிர்வாக இயக்குனர் ராஜதுரை பேசியதாவது:
பீளமேடு முருகன் நகரில், 2 ஏக்கர் பரப்பளவில் 3, 4 படுக்கை அறைகள் கொண்ட பிரத்யேகமான, 25 அழகிய வீடுகளை உள்ளடக்கிய, 'சுக்ராஸ் என்கிளேவ்' புராஜெக்டை துவக்கி இருக்கிறோம்.
மக்கள் விரும்பும் நவீன வாழ்க்கை முறைக்கேற்ப, ஒவ்வொரு வீடும் வடிவமைக்கப்பட்டு, உயர்தர தோற்றத்தில் உருவாக்கித் தர இருக்கிறோம்.
அறிமுக விழா சலுகையாக, 3 கோடி ரூபாய் முதல் வாங்கலாம். மறைமுக கட்டணம் எதுவும் இல்லை. 10 தெற்கு பார்த்த வீடுகள் மற்றும் 15 வடக்கு பார்த்த வீடுகள், அனைத்து வசதிகளுடன் அமைந்துள்ளன.சிறந்த ஆர்க்கிடெக்குகளை கொண்டு, விரும்பும் வகையில் கட்டமைப்புகள் உருவாக்கித் தரப்படும். வங்கி கடன் வசதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் பேசினார்.
சேஷன் ஹோம்ஸ் நிறுவனத்தின் ஆர்க்கிடெக்ட் ஸ்ரீவித்யா, சிறப்பு விருந்தினர்கள், வாடிக்கையாளர்கள்மற்றும் வங்கிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

