/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இஸ்கான் கோயில் வளாகத்தில் இன்று சுதர்சன சக்கரம் பிரதிஷ்டை
/
இஸ்கான் கோயில் வளாகத்தில் இன்று சுதர்சன சக்கரம் பிரதிஷ்டை
இஸ்கான் கோயில் வளாகத்தில் இன்று சுதர்சன சக்கரம் பிரதிஷ்டை
இஸ்கான் கோயில் வளாகத்தில் இன்று சுதர்சன சக்கரம் பிரதிஷ்டை
ADDED : ஆக 14, 2025 08:48 PM
கோவை; கொடிசியா கண்காட்சி அரங்கம் அருகே இஸ்கான் அமைத்துள்ள ஜெகன்நாதர் கோயில் வளாகத்தில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீ ராதாகிருஷ்ணர் கோயில் கோபுரத்தின் உச்சியில் சுதர்சன சக்கரம் இன்று பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
இஸ்கான் கோயிலில் நிறுவும் இந்த சுதர்சன சக்கரம், கோவையின் அடையாளமாக திகழப்போகிறது. 13 அடி விட்டத்துடன் கூடிய இந்த பிரம்மாண்ட சக்கரம் தரையிலிருந்து, 108 அடி உயரத்தில் நிறுவப்பட உள்ளது.
பிரதிஷ்டையில் முதல் நிகழ்வாக, காலை 5.30 மணிக்கு, மஹா சுதர்சன ஹோமம் நடக்கிறது. சக்தி வாய்ந்த இச்சக்கரம் பக்தர்களைப் பாதுகாக்க வல்லது. பகவானின் அருளைப் பரப்பி அதர்மங்களை அழித்து, தர்மத்தை நிலைநாட்டி, பக்தர்களின் துன்பங்களை அழிக்கக்கூடியது.
இச்சக்கரம் வேதங்களால் போற்றப்படுகிறது. ஸ்ரீரங்கம், திருப்பதி உள்ளிட்ட பிரபல வைணவ தலங்களில் சக்கரத்தாழ்வாருக்கு தனி சன்னிதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இப்போது அந்த சக்கரத்தாழ்வார் கோவையில் பிரம்மாண்டமாய் பக்தர்களுக்கு காட்சியளிக்க போகிறார். ஒடிசா மாநிலம் பூரி ஜெகன்னாதர் கோயிலில் பிரம்மாண்டமான கோபுரத்தில் வீற்றிருக்கும் சுதர்சன பகவான் அருளை பக்தர்களுக்கு வழங்கிப் பாதுகாக்கிறார்.
அதை பின்பற்றி கோவை யிலும் சுதர்சன சக்கரம் அமைத்து சக்கரத்தாழ்வார் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளார். இந்த சுதர்சன சக்கரம், கோவையின் ஆன்மிக வளர்ச்சியின் சின்னமாகவும், பக்தர்களுக்கான பாதுகாப்பின் அடையாளமாகவும் நிலைத்திருக்கும்.