/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேட்டுப்பாளையம் ரோடு குப்பைமேட்டில் திடீர் தீ!
/
மேட்டுப்பாளையம் ரோடு குப்பைமேட்டில் திடீர் தீ!
ADDED : மார் 29, 2025 11:41 PM

பெ.நா.பாளையம்: கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில், தொப்பம்பட்டி பிரிவு அருகே குப்பைமேடு திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மேட்டுப்பாளையம் ரோடு, குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட தொப்பம்பட்டி பிரிவு அருகே சாலையோரத்தில் குப்பை கொட்டப்படுகிறது.
இதை தடுக்க, ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் குப்பை கொட்டும் இடத்தை சுற்றிலும், பச்சை நிறத்தில் தடுப்பு அமைக்கப்பட்டு, தடை செய்யப்பட்டுள்ளது. இதையும் மீறி குப்பை கொட்டப்படுகிறது.
இங்கு கொட்டப்பட்ட குப்பையில், நேற்று திடீரென தீப்பற்றி எரிந்தது. குப்பைமேட்டை சுற்றிலும் உள்ள தடுப்புகளும், எரிந்து சாம்பலாகும் நிலை ஏற்பட்டது.
குப்பைமேட்டின் மேல் பகுதியில் மின்சார ஒயர்கள் சென்றதால், மின் விபத்து ஏற்படும் அபாயம் உருவானது.
இதை தடுக்க, உடனடியாக பொதுமக்கள் குருடம்பாளையம் ஊராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
ஊழியர்கள் லாரி தண்ணீர் தெளித்து, தீயை அணைத்தனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.