sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

லிட்டருக்கு எட்டு ரூபாய் பால் விலை திடீர் உயர்வு; பொது மக்கள் அதிருப்தி

/

லிட்டருக்கு எட்டு ரூபாய் பால் விலை திடீர் உயர்வு; பொது மக்கள் அதிருப்தி

லிட்டருக்கு எட்டு ரூபாய் பால் விலை திடீர் உயர்வு; பொது மக்கள் அதிருப்தி

லிட்டருக்கு எட்டு ரூபாய் பால் விலை திடீர் உயர்வு; பொது மக்கள் அதிருப்தி


ADDED : ஜன 08, 2024 10:48 PM

Google News

ADDED : ஜன 08, 2024 10:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்;ஆவின் பால் கொள்முதல் நிலையங்களில், ஒரு லிட்டருக்கு, எட்டு ரூபாய் விலை உயர்த்தி விற்பனை செய்யப்படுவது மக்களை அதிருப்தியடைய செய்துள்ளது.

கோவை மாவட்டம் முழுவதும், ஆவின் நிறுவனத்திற்கு உட்பட்ட, நூற்றுக்கணக்கான பால் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. இந்த கொள்முதல் நிலையங்கள் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் கீழ் இயங்குகிறது. இந்த நிலையங்களில் விவசாயிகள் ஊற்றும் பாலை, கோவை ஆவின் நிறுவனத்திற்கு கொண்டு சென்று, பால் பாக்கெட்டுகளில் நிரப்பி, பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இது அல்லாமல் அந்தந்த பால் கொள்முதல் நிலையங்களில், காலை, மாலை பொது மக்களுக்கு பால் விற்பனை செய்யப்படுகிறது.

மேட்டுப்பாளையம் தாலுகாவில் காரமடை, சிறுமுகை ஆகிய பகுதிகளில், 40 க்கும் மேற்பட்ட பால் கொள்முதல் நிலையங்கள், கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக செயல்படுகின்றன. இந்த நிலையங்களில், காலை மாலையில் விவசாயிகள் பால் ஊற்றும்போது, பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில் சிறுமுகை அடுத்த லிங்காபுரம், இலுப்பபாளையம் ஆகிய பால் கொள்முதல் நிலையங்களில், கடந்த நான்கு நாட்களாக, ஒரு லிட்டர் பாலுக்கு எட்டு ரூபாய் விலை உயர்த்தி விற்பனை செய்கின்றனர்.

கடந்த மாதம் வரை இந்த கூட்டுறவு சங்க பால் கொள்முதல் நிலையங்களில், ஒரு லிட்டர் பால், 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. திடீரென எந்தவித அறிவிப்பும் இல்லாமல், கடந்த ஐந்து நாட்களாக ஒரு லிட்டர் பாலுக்கு, எட்டு ரூபாய் விலை உயர்த்தி, 48 ரூபாய் விற்பனை செய்கின்றனர்.

பால் விலை உயர்வு குறித்து, தமிழக அரசு எவ்வித அறிவிப்பும் செய்யவில்லை. ஆனால் கூட்டுறவு சங்க அதிகாரிகள் விலையை உயர்த்தி, விற்பது வாடிக்கையாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்ட நிர்வாகம் மற்றும் ஆவின் நிறுவன அதிகாரிகள், சிறுமுகை இலுப்பபாளையம், லிங்காபுரம் ஆகிய கூட்டுறவு சங்க பால் கொள்முதல் நிலையங்களில் பால் விலை உயர்வு குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்கின்றனர் அப்பகுதி பொதுமக்கள்.

இது குறித்து மாவட்ட ஆவின் நிறுவன அதிகாரியிடம் கேட்டபோது, ''அந்தந்த பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் வளர்ச்சிக்காக, விலையை நிர்ணயம் செய்து கொள்ளலாம். இருந்த போதும் விலையை உயர்த்திய, சம்பந்தப்பட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கொள்முதல் நிலையங்களில், விசாரணை செய்யப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us