/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில் செல்லும் ரோடு சேதமடைந்ததால் அவதி
/
கோவில் செல்லும் ரோடு சேதமடைந்ததால் அவதி
ADDED : ஜன 17, 2025 11:56 PM

கிணத்துக்கடவு, ; கிணத்துக்கடவு முத்துமலை முருகன் கோவில் செல்லும் ரோடு சேதமடைந்துள்ளதால், பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
கிணத்துக்கடவு, சொக்கனூர் அருகே உள்ள முத்துக்கவுண்டனூரில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற முத்துமலை முருகன் கோவில். கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
அடுத்த மாதம் தைப்பூசம் நிகழ்ச்சி நடப்பதால் பக்தர்கள் பலர் இந்த கோவிலுக்கு செல்வது வழக்கம். தற்போது, இந்த கோவிலுக்கு பக்தர்கள் பலர் பாதயாத்திரையாக சென்று வருகின்றனர்.
இதில், சொக்கனூர் ரோட்டில் இருந்து முத்துக்கவுண்டனூர் செல்லும் ரோடு சில இடங்களில் கடுமையாக சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் கடும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, மாலை நேரத்தில் இவ்வழியில் நடந்து செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
ரோட்டில் நிலை தடுமாறி கீழே விழுகின்றனர். எனவே, கோவிலுக்கு வரும் பக்தர்கள் நலன் கருதி விரைவில் ரோட்டை சீரமைக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.