/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விபத்துக்கு வழி வகுக்கும் வேகத்தடைகளால் அவதி
/
விபத்துக்கு வழி வகுக்கும் வேகத்தடைகளால் அவதி
ADDED : மார் 12, 2024 09:56 PM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி பகுதியில், வேகத்தடை மீது வெள்ளை நிற பெயின்ட் அடிக்காமல் இருப்பதுடன், அறிவிப்பு பலகைகளும் இல்லாததால் விபத்துகள் ஏற்படுகிறது.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் விபத்துகளை தடுக்க, ஆங்காங்கே வேகத்தடைகள் மற்றும் வெள்ளை தடுப்புகள் அமைக்கப்படுகின்றன. அதில், நகரப்பகுதிகளில் குடியிருப்பு மற்றும் முக்கிய ரோடுகளில் வேகத்தடைகள் தற்போது அதிகளவு அமைக்கப்படுகின்றன.
ஆனால், வெள்ளை நிற பெயின்ட் அடித்து, அறிவிப்பு பலகைகள் வைக்காததால், விபத்துகள் ஏற்படுகின்றன. தற்போது, மகாலிங்கபுரம் சக்தி விநாயகர் கோவில் மற்றும் சுற்றுப்பகுதிகளில் இதுபோன்று வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ள சூழலில், விபத்துகள் ஏற்பட்டு வாகன ஓட்டுநர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
விபத்துகளை கட்டுப்படுத்த வேகத்தடைகள் அமைப்பது வரவேற்கதக்கது. அதே நேரத்தில் வேகத்தடை அமைக்கும் போது, அதை அடையாளப்படுத்த வெள்ளை நிற பெயின்ட் அடிக்க வேண்டும். இங்கு வேகத்தடை உள்ளது; கவனமாக வரவும் என அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும். ஆனால், வெள்ளை நிற பெயின்ட் அடிக்காமல், அறிவிப்பு பலகையும் வைக்காமல் உள்ளதால், விபத்துகள் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, வேகத்தடை அமைக்கும் போதே பாதுகாப்பு விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

