/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'சர்க்கரை கலந்த ஓ.ஆர்.எஸ். கரைசல் குழந்தைகளுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தும்'
/
'சர்க்கரை கலந்த ஓ.ஆர்.எஸ். கரைசல் குழந்தைகளுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தும்'
'சர்க்கரை கலந்த ஓ.ஆர்.எஸ். கரைசல் குழந்தைகளுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தும்'
'சர்க்கரை கலந்த ஓ.ஆர்.எஸ். கரைசல் குழந்தைகளுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தும்'
ADDED : அக் 30, 2025 11:23 PM
கோவை:  தேசிய உணவு பாதுகப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு, ஓ.ஆர்.எஸ்., கரைசல் பெயரை சர்க்கரை பானங்கள் சார்ந்த தயாரிப்புகளின் லேபிள்களில் ஒட்டி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது மீண்டும் அனுமதி அளித்து இருப்பது குழந்தைகள் நல டாக்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,  அமைப்பு சர்க்கரை கலந்த பானங்கள், பவுடர்களின் லேபிள்களில் 'ஓ.ஆர்.எஸ்., கரைசல்' என்ற பெயரை பயன்படுத்தக்கூடாது  என தடை விதித்து இருந்த உத்தரவை மீண்டும் திரும்ப பெற்றுள்ளது.
இதனால், மருந்து கடைகளில் வைக்கப்பட்டு இருந்த ஸ்டாக் தற்போது தடையின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
உலக சுகாதார வழிகாட்டுதலின் படி, ஒரு லிட்டர் ஓ.ஆர்.எஸ்., கரைசலில், 2.6 கிராம் சோடியம் குளோரைடு, 1.5 கிராம் பொட்டாசியம் குளோரைடு, 2.9 கிராம் சோடியம் சிட்ரேட், 13.5 கிராம் டெக்ஸ்ட்ரோஸ் ஆகியவை இருக்க வேண்டும்.
ஆனால் குளிர் பானங்களில் உயிரிழப்பைத் தடுக்கும் எலக்ட்ரோலைட்ஸ் மிகக் குறைந்த அளவில் இருப்பதும், சர்க்கரை அளவு அதிகளவில் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்திய குழந்தைகள் நலச்சங்க தமிழக கிளை தலைவர் டாக்டர் ராஜேந்திரன் கூறியதாவது:
வாந்தி, வயிற்றுபோக்கு அதிகம் ஏற்படும் குழந்தைகளுக்கு ஓ.ஆர்.எஸ்., கரைசல் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், விழிப்புணர்வு இன்றி சர்க்கரை கலந்த ஓ.ஆர்.எஸ்., என்று பெயரிட்ட பானங்களை குழந்தைகளுக்கு வாங்கி கொடுத்தால் உயிரிழப்பு வரை கூட ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த ஓ.ஆர்.எஸ்., கரைசல் மட்டுமே பொதுமக்கள் வாங்கி பயன்படுத்தவேண்டும்.
எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., தடை உத்தரவை திரும்ப பெற்று இருந்தாலும் பொதுமக்கள் இதுபோன்ற பானங்களை வயிற்றுபோக்கு, வாந்தி உள்ள சமயங்களில் புறக்கணிக்கவேண்டும். பெற்றோர் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டியது அவசியம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

