/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் கரும்பு பிழிந்த சீமான்
/
கோவையில் கரும்பு பிழிந்த சீமான்
ADDED : மே 18, 2025 03:18 AM

கோவை: நாம் தமிழர் கட்சி சார்பாக, தமிழினி பேரெழுச்சி பொதுக்கூட்டம், கோவை 'கொடிசியா' மைதானத்தில் இன்றிரவு (18ம் தேதி) நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கவனிக்க, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இரு நாட்களாக கோவையில் முகாமிட்டுள்ளார்.
நேற்று காலை 'கொடிசியா' ரோட்டில், கட்சியினருடன் நடைபயிற்சி மேற்கொண்ட அவர், கரும்பு ஜூஸ் விற்கும் கடைக்கு சென்று, வியாபாரியுடன் சேர்ந்து கரும்பு பிழியும் பணியில் ஈடுபட்டார். கரும்பு ஜூஸ் தயாரித்து, தொண்டர்களுக்கு வழங்கியதோடு, தானும் பருகினார்.
சிறிது துாரம் சென்றதும் ஒருவர் நுங்கு, பதநீர் விற்றுக் கொண்டிருந்தார். பனைமட்டையில் பதநீர் வாங்கிக் குடித்து விட்டு, நடைபயணத்தை தொடர்ந்தார்.
அவருடன், தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் நுங்கு வாங்கி சாப்பிட்டு பின்தொடர்ந்தனர்.