/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கரும்பு சாகுபடி கையேடு வெளியீடு
/
கரும்பு சாகுபடி கையேடு வெளியீடு
ADDED : ஆக 22, 2025 11:37 PM
பொள்ளாச்சி: கரும்பு விவசாயிகளுக்காக, சாகுபடித் தொழில்நுட்பங்கள் அடங்கிய 'வளமான வாழ்வுக்கு கரும்பு சாகுபடி' கையேட்டை, கரும்பு ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதில், 13 அத்தியாயங்களில், கரும்பு ரகங்கள், தரமான கரும்பு விதை உற்பத்தி, நீர் மற்றும் உர மேலாண்மை, இயந்திரங்கள், நோய் மற்றும் பூச்சி மேலாண்மை உள்ளிட்ட சாகுபடித் தொழில்நுட்பங்கள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
திசு வளர்ப்பு நாற்று உற்பத்தி, கரும்பில் இருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள், விவசாயிகளுக்கான தகவல் பரிமாற்ற வழிமுறைகள், தொழில்முனைவோர் மேம்பாடு குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளன.
கரும்பு ஆராய்ச்சியில், பல ஆண்டு அனுபவம் பெற்ற விஞ்ஞானிகளின் தொழில்நுட்பக் கட்டுரைகள், விவசாயிகளுக்கு மட்டுமின்றி, விரிவாக்க அலுவலர்கள், வேளாண் மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். முதுநிலை விஞ்ஞானி புத்திர பிரதாப், இக்கையேட்டை தொகுத்துள்ளார். புத்தகத்தை, கோவை கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் பெற்றுக் கொள்ளலாம்.