நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெகமம் : நெகமம், பனப்பட்டியை சேர்ந்தவர் குருசாமி, 44, முடிதிருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. குடித்து விட்டு வீட்டிற்கு செல்வதால், இவருக்கும் மனைவி மரகத்துக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
இதனால் மனம் உடைந்த குருசாமி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மனைவி மற்றும் அருகில் இருந்தவர்கள், நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.