திறப்பு விழாவுக்கு தயாராகிறது சுல்தான்பேட்டை ஸ்டேஷன்
திறப்பு விழாவுக்கு தயாராகிறது சுல்தான்பேட்டை ஸ்டேஷன்
UPDATED : அக் 09, 2026 07:45 PM
ADDED : அக் 09, 2026 07:42 PM

சூலுார்:
சுல்தான்பேட்டையில், போலீஸ் ஸ்டேஷனுக்கு, புதிய கட்டடம் கட்டும் பணி இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் காமநாயக்கன்பாளையம், கோவை மாவட்டம் நெகமம், சூலுார் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு உட்பட்ட பல கிராமங்கள் பிரிக்கப்பட்டு, 2019ல் சுல்தான்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் உருவாக்கப்பட்டது. பல்லடம் --–- பொள்ளாச்சி சாலையில் உள்ள யூனியன் அலுவலகம் அருகில், வாடகை கட்டடத்தில் போலீஸ் ஸ்டேஷன் செயல்பட்டு வருகிறது.
முன்னாள் எம்.எல்.ஏ., கந்தசாமி, சுல்தான்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, கடந்த ஆட்சியில் கோரிக்கை விடுத்து வந்தார். கடந்தாண்டு புதிய கட்டடம் கட்ட பல்லடம் பிரதான சாலையில், 50 சென்ட் இடம் தேர்வு செய்யப்பட்டது. 1 கோடியோ, 50 லட்சம் நிதியும் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்தன. இரண்டு தளங்கள், 10 அறைகள் மற்றும் நவீன வசதிகளுடன் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஒயரிங் பணிகள் முடிந்ததும், திறப்பு விழாவுக்கு தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
