/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சூலுார் தொகுதியில் பெண் வாக்காளர் அதிகம்
/
சூலுார் தொகுதியில் பெண் வாக்காளர் அதிகம்
ADDED : ஜன 29, 2024 11:17 PM
சூலுார்;லோக்சபா தேர்தல் விரைவில் நடக்க உள்ளதால், தேர்தல் ஆணையம், தேர்தல் தொடர்பான பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.
வாக்காளர் பட்டியலை முறைப்படுத்தும் பணியில் கடந்த இரு மாதங்களாக ஈடுபட்டனர். கடந்த,, 22 ம்தேதி தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
கோவை மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளின் வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், சூலூர் சட்டசபை தொகுதியில், 3 லட்சத்து, 21 ஆயிரத்து, 803 வாக்காளர்கள் உள்ளனர்.
ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து, 56 ஆயிரத்து, 175 பேரும், பெண் வாக்காளர்கள், 1 லட்சத்து 65 ஆயிரத்து, 545 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள், 83 பேரும் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட, 9 ஆயிரத்து, 370 பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.