/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொலை வழக்கை சரியாக விசாரிக்காத சூலுார் இன்ஸ்பெக்டர் 'சஸ்பெண்ட்'
/
கொலை வழக்கை சரியாக விசாரிக்காத சூலுார் இன்ஸ்பெக்டர் 'சஸ்பெண்ட்'
கொலை வழக்கை சரியாக விசாரிக்காத சூலுார் இன்ஸ்பெக்டர் 'சஸ்பெண்ட்'
கொலை வழக்கை சரியாக விசாரிக்காத சூலுார் இன்ஸ்பெக்டர் 'சஸ்பெண்ட்'
ADDED : ஆக 11, 2025 11:50 PM
கோவை; கொலை வழக்கை சரியாக விசாரணை நடத்தாத, இன்ஸ்பெக்டரை டி.ஐ.ஜி., சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங் கோட்டையை சேர்ந்த ஜெயராம், 24 என்பவரைகொலை செய்து, மலுமிச்சம்பட்டியில் உள்ள கிணற்றில் வீசினர். விசாரணையில், இரு மாதங்களுக்கு முன் கொலை நடந்தது தெரிந்தது. கிணற்றில் இருந்து எலும்புக்கூடு எடுக்கப்பட்டது. கொலை வழக்கில் திருநெல்வேலி பாளையங்கோட்டையை சேர்ந்த முருகபெருமாள், பாலமுருகன் ஆகியோர் செட்டிபாளையம் போலீசாரிடம் சரணடைந்தனர். செட்டிபாளையம் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியாக உள்ளதால், அப்பொறுப்பை கவனித்து வரும் சூலுார் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் லெனின், இவ்வழக்கை விசாரித்தார்.
விசாரணையில், கொலையை நியூட் டன், 28, பெனிட்டோ, 29 ஆகியோர் செய்ததும், கொலையில் தொடர்பு இல்லாத ஒருவரை, இவ்வழக்கில் சேர்த்து கைது செய்ததும் தெரிந்தது.
சரியாக விசாரணை நடத்தாத இன்ஸ்பெக்டர் லெனினை, கோவை டி.ஐ.ஜி., சசிமோகன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.