/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுமங்கலி ஜூவல்லரி புதிய கிளை திறப்பு
/
சுமங்கலி ஜூவல்லரி புதிய கிளை திறப்பு
ADDED : பிப் 23, 2024 12:17 AM

கோவை;கோவையில் தங்க நகை வணிகத்தில், 45 ஆண்டுகள் பாரம்பரியமிக்க சுமங்கலி ஜூவல்லர்ஸின் மூன்றாவது கிளை திறப்பு விழா, கிராஸ்கட் ரோட்டில் நேற்று நடந்தது.
சுமங்கலி ஜூவல்லரியின் தலைவர் விஸ்வ நாதன், கிரிஜா விஸ்வநாதன் ஆகியோர், ஷோரூமை திறந்து வைத்தனர். மூன்று தளங்களை கொண்ட இந்த பிரமாண்டமான ஜூவல்லரியில், முதல் தளத்தில் தனித்துவமான ஆண்டிக் நகைகள், இரண்டாம் தளத்தில் வஜ்ரா டைமெண்ட் கலெக் ஷன்கள், மூன்றாம் தளத்தில் தங்க நகைகள் இடம்பெற்றுள்ளன.
திறப்பு விழா சிறப்பு சலுகையாக தங்க நகைகளுக்கு சேதாரத்தில், 25 சதவீதமும், வைரத்துக்கு கேரட் 15 ஆயிரம் ரூபாயும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
சுமங்கலி ஜூவல்லரியின் தலைவர் விஸ்வநாதன் கூறுகையில், ''மூன்றாவது ஷோரூமை வாடிக்கையாளர்களின் ஆதரவுடன் பிரம்மாண்டமாக துவக்கி இருக்கிறோம். மக்களின் ஆதரவோடு இன்னும் பல கிளைகளை, வரும் காலங்களில் துவக்க இருக்கிறோம்,'' என்றார்.
சுமங்கலி ஜூவல்லரி இயக்குனர்கள் செந்தில்குமார், ஸ்ருதி செந்தில்குமார், அஷ்யந்த், ஸ்குவியா அஷ்யந்த், அனிதா, ராம் ஆகியோர் பங்கேற்றனர்.