/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அண்ணா பல்கலை மண்டல மையத்தில் கோடைகால இலவச பயிற்சி நிறைவு
/
அண்ணா பல்கலை மண்டல மையத்தில் கோடைகால இலவச பயிற்சி நிறைவு
அண்ணா பல்கலை மண்டல மையத்தில் கோடைகால இலவச பயிற்சி நிறைவு
அண்ணா பல்கலை மண்டல மையத்தில் கோடைகால இலவச பயிற்சி நிறைவு
ADDED : மே 19, 2025 11:52 PM
கோவை; அண்ணா பல்கலை மண்டல மையத்தில் நடந்த, இலவச கோடைகால பயிற்சி முகாமில், 38 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
அண்ணா பல்கலை மண்டல மையத்தில், 10 முதல், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் இலவச கோடைக்கால பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. கடந்த, 1 முதல், 16ம் தேதி வரை, 17 நாட்களுக்கு இந்தாண்டுக்கான பயிற்சி முகாம் இடம்பெற்றது.
கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, கபடி மற்றும் யோகா ஆகியவற்றில் மாணவர்களுக்கு தலா, 45 மணி நேர பயிற்சி வழங்கப்பட்டது. விளையாட்டு சங்க நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் கொண்டு வழங்கப்பட்ட பயிற்சியில், 38 பள்ளி மாணவர்கள் பயனடைந்தனர்.
காலை, 6:00 முதல் 8:00 மணி வரையும், மாலை, 4:30 முதல்6:30 மணி வரையும் இப்பயிற்சி வழங்கப்பட்டது. நிறைவு நாளில், பல்கலையின் மண்டல மைய டீன் சரவணக்குமார், முகாம் அமைப்பின் செயலாளர் சரவணமூர்த்தி ஆகியோர், மாணவர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினர்.