ADDED : ஏப் 09, 2026 09:14 PM
கோவை:கோடை வெயில் கடுமையாக இருப்பதால், பட்டுக்கூடு உற்பத்தி குறைந்துள்ளது.
பாலசுந்தரம் ரோட்டில் உள்ள பட்டுக்கூடு விற்பனை அங்காடிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் பட்டுக்கூடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. கடந்த இரு மாதங்களாக பட்டுக்கூடுக்கு நல்ல விலை கிடைத்தது. வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால், பட்டுக்கூடு உற்பத்தி குறைந்துள்ளது. உற்பத்தி செய்யப்படும் கூடுகளின் தரமும் குறைந்துள்ளது. கடந்த மாதம் ஒரு கிலோ கூடு ரூ.897 வரை விற்பனையானது. நேற்று ரூ.680, அடுத்த தரம் கிலோ, ரூ.475 க்கு விற்பனையானது.
பட்டுகூடு அங்காடி அதிகாரிகள் கூறுகையில், 'வெயிலில் பட்டுப்புழுக்களை பராமரிப்பது கடினம். நுால் தரமாக வராது. இதில் அனுபவம் உள்ள விவசாயிகள் நன்றாக பராமரிப்பர். பிற விவசாயிகளால் வெயிலை சமாளிக்க முடியாது. ஏற்கனவே உற்பத்தி செய்த பட்டு நுால் விற்பனையாகமல் இருப்பு உள்ளது. அதனால் ரீலர்கள் நுால் நுாற்பதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர். இந்த மாதம் இறுதி வரை பட்டுக்கூடு விலை உயர வாய்ப்பு இல்லை' என்றனர்.
