ADDED : ஏப் 03, 2026 05:21 PM
அ நிறம் | அளவு
வால்பாறை: வால்பாறையில் கடந்த நான்கு மாதங்களாக வெயில் நிலவுகிறது. இடையிடையே சாரல்மழையும் பெய்து வருவதால், குளுகுளு சீசன் நிலவுகிறது. இதனால், சுற்றுலா பயணியர் அதிகளவில் வரத்துவங்கி உள்ளனர்.
இந்நிலையில், வால்பாறையில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் நேற்று முன்தினம் மாலை, இடியுடன் கனமழை பெய்தது. கோடை வெயிலை தணிக்கும் வகையில் பெய்த மழையால் உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணியரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நேற்று காலை, 8:00 மணி வரை, வால்பாறை - 47 மி.மீ., மேல்நீராறு - 69 மி.மீ., கீழ்நீராறு - 48 மி.மீ., சோலையாறு - 10 மி.மீ., பரம்பிக்குளம் - 3 மி.மீ., என்ற அளவில் மழை பெய்தது.
