/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுற்றுலா பயணியரை மகிழ்வித்த கோடைமழை
/
சுற்றுலா பயணியரை மகிழ்வித்த கோடைமழை
ADDED : மே 14, 2025 11:39 PM

வால்பாறை: வால்பாறையில் பரவலாக பெய்யும் கோடை மழையால், சுற்றுலா பயணியர் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.
வால்பாறையில், தற்போது குளுகுளு சீசன் நிலவுவதாலும், கோடை விடுமுறை என்பதாலும், ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர். சமவெளிப்பகுதியில் வெயில் கொளுத்தும் நிலையில் வால்பாறையில் இடையிடையே கோடைமழை பரவலாக பெய்வதால், சுற்றுலா பயணியர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில், பரவலாக பெய்யும் கோடை மழையால், தேயிலை விவசாயிகளும், பி.ஏ.பி., பாசன விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நேற்று காலை, 8:00 மணி வரை, வால்பாறை - 2 மி.மீ., மேல்நீராறு - 17 மி.மீ., கீழ்நீராறு -8 மி.மீ., என்ற அளவில் மழை பெய்தது.