/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோடை மழை; விவசாயிகள் மகிழ்ச்சி
/
கோடை மழை; விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஏப் 07, 2025 05:16 AM
பெ.நா.பாளையம்; கோவை புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கோடை மழையால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. இதனால், மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர தயக்கம் காட்டினர். ஆனால், கடந்த மூன்று நாட்களாக பகல் நேரத்தில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.
இரவு நேரங்களில் மழை பெய்தது. நேற்று மாலை நேரத்தில் பெரியநாயக்கன்பாளையம் வட்டாரங்களில் விட்டுவிட்டும், தொடர்ந்தும் மழை பெய்தது. பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில், 62.40 மி.மீ., அளவு மழை பெய்தது.
இது குறித்து, வேளாண் துறையினர் கூறுகையில், 'காய்கறி பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு இம்மழை நன்கு உதவிகரமாக இருக்கும். மேலும், வாழை, தென்னங்கன்று உள்ளிட்ட மர பயிர்களுக்கும் இம்மழை உதவும். பொதுவாக கோடைகாலங்களில் ஆழ்குழாய் கிணறுகளிலும் நீர் வற்றி காணப்படும்.
இந்நிலையில், மழை பெய்வது விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல், உள்ளாட்சிகளில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளிலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து பொதுமக்களுக்கு பயனளிக்கும்' என்றனர்.

