/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோடை விடுமுறை முடிவு; இன்று பள்ளிகள் மீண்டும் திறப்பு
/
கோடை விடுமுறை முடிவு; இன்று பள்ளிகள் மீண்டும் திறப்பு
கோடை விடுமுறை முடிவு; இன்று பள்ளிகள் மீண்டும் திறப்பு
கோடை விடுமுறை முடிவு; இன்று பள்ளிகள் மீண்டும் திறப்பு
ADDED : ஜூன் 01, 2025 11:31 PM
கோடை விடுமுறை முடிந்து, இன்று பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், புதிய சேர்க்கை மாணவர்கள், கொண்டாட்டத்துடன் வரவேற்கப்படவுள்ளனர்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், உள்ள அரசு மற்றும் பள்ளிகளுக்கு கடந்த ஒரு மாதமாக, கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. விடுமுறை நாட்களில், மாணவர்கள், விளையாடியும், உறவினர் வீடு மற்றும் சுற்றுலாத்தலங்களுக்குச் சென்றும் பொழுதை கழித்தனர். மேலும் சில மாணவர்கள் கோடை கால பயிற்சி முகாமில் பங்கேற்றனர்.
இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து, இன்று, மாநிலம் முழுவதும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது. அவ்வகையில், சில பள்ளிகளில், மாணவர்கள் உற்சாகத்துடன் வரவேற்கும் வகையில், ஆசிரியர்கள் தயார்படுத்தப்பட்டுள்ளனர்.
பள்ளித் தலைமையாசிரியர்கள் கூறியதாவது: பள்ளிப்பாடங்களை மறந்து, கொண்டாடி கழித்த நீண்ட விடுமுறை நாட்களை நினைத்து ஏக்கத்துடன் மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிவர். புதிய வகுப்பு, புதிய பாடங்கள் குறித்த ஆர்வத்தை துாண்டும் வகையில், அவர்களை வரவேற்க திட்டமிடப்பட்டுள்ளது.
பூங்கொத்து, மலர்கள் கொடுத்து அவர்களை வரவேற்க, சில பள்ளி ஆசிரியர்கள் தயார் நிலையில் உள்ளனர். அதன்படி, முதல்நாளிலேயே பாடப்புத்தகங்கள், நோட்டுகள், பேக், சீருடை உள்ளிட்ட கல்வி சார்ந்த நலத்திட்டங்களை வழங்கி, அவரவர் வகுப்புகளுக்கு அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
உடுமலை
அரசு பள்ளிகளில், குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க, கல்வித்துறை பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொள்கிறது. அதில், பள்ளி முதல்நாளில் மாணவர்களை வரவேற்பதிலும் புதுமையாக இருக்க வேண்டுமென கல்வித்துறை பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
பள்ளியின் சுகாதாரம், குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளை கண்காணித்துக்கொள்ள, தலைமையாசிரியர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பிருந்து பள்ளிக்கு வர துவங்கிவிட்டனர். இன்று புதிய கல்வியாண்டு துவங்குகிறது.
இந்நாளில், குழந்தைகளுக்கு, பள்ளியின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில், உற்சாகமான நிலையில் வரவேற்பு இருக்க வேண்டுமென, கல்வித்துறை அலுவலர்கள் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
மாணவர்களும் பள்ளிக்கு செல்ல தயாராக உள்ளனர்.
- நிருபர் குழு -