/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராமர் கோவிலில் இன்று முதல் சுந்தரகாண்டம் சொற்பொழிவு
/
ராமர் கோவிலில் இன்று முதல் சுந்தரகாண்டம் சொற்பொழிவு
ராமர் கோவிலில் இன்று முதல் சுந்தரகாண்டம் சொற்பொழிவு
ராமர் கோவிலில் இன்று முதல் சுந்தரகாண்டம் சொற்பொழிவு
ADDED : மே 13, 2025 11:53 PM
கோவை,; ராம்நகர் கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானத்தில் இன்று முதல், ராமாயனத்தில் மிக முக்கிய நிகழ்வான சுந்தரகாண்டம் குறித்த சொற்பொழிவு நடக்கிறது.
இன்று துவங்கும் சொற்பொழிவு, இம்மாதம் 25ம் தேதி வரை தொடர்ந்து நடக்கிறது. ஆன்மிக சொற்பொழிவாளர் பிரம்மஸ்ரீ சுந்தரகுமார் சொற்பொழிவு நிகழ்த்துகிறார். அன்றாடம் மாலை 6:30 மணிக்கு துவங்கி, இரவு 8:30 மணி வரை நடைபெறும்.
ராமர் கோவிலில் அமைந்துள்ள, ஸ்ரீ மத் அபிநவ வித்யா தீர்த்த பிரவசன மண்டபத்தில் நடைபெறும் இச்சொற்பொழிவிற்கான ஏற்பாடுகளை, ராம்நகர் திருப்பாவை திருவெம்பாவை கமிட்டி மற்றும் கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் அதன் தலைவர் நாகசுப்ரமணியம் ஏற்பாடு செய்துள்ளார்.