/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பகலில் வெயில்; இரவில் குளிர் ஜாக்கிரதை என்கிறார் டாக்டர்
/
பகலில் வெயில்; இரவில் குளிர் ஜாக்கிரதை என்கிறார் டாக்டர்
பகலில் வெயில்; இரவில் குளிர் ஜாக்கிரதை என்கிறார் டாக்டர்
பகலில் வெயில்; இரவில் குளிர் ஜாக்கிரதை என்கிறார் டாக்டர்
ADDED : ஜன 29, 2024 12:39 AM
கோவை:இரவில் அதிக குளிரும், பகலில் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால், விழிப்புடன் இருக்க டாக்டர்கள் அறிவுரை வழங்குகின்றனர்.
கோவை மாவட்டத்தில், பகலில் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தாலும், இரவில் பனியின் தாக்கமும் அதிகம் இருந்து வருகிறது. காலை, 9:00 மணி வரை குளிரின் தாக்கம் உள்ளது.
இவ்வாறு மாறுபட்ட வெப்ப நிலை நிலவுவதால், நோய் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக, டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் அருணா கூறுகையில், ''இதுபோன்ற காலநிலை நிலவும் போது, முதியவர்கள், இணை நோய் உள்ளவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். குறிப்பாக, இருதய பாதிப்பு உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். பகல் நேரங்களில் நீர்ச்சத்து குறைய வாய்ப்புள்ளது.
இதைத்தடுக்க, குறிப்பிட்ட இடைவெளியில் சுத்தமான நீர் அருந்த வேண்டும். இரவில் வெதுவெதுப்பான பொருட்களை உட்கொள்ள வேண்டும். மாவட்டத்தில், 12 வட்டாரங்களில், 50 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதில் பொதுமக்களுக்கு தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது,'' என்றார்.