
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை, - மாவட்ட அளவிலான 'சி' டிவிஷன் கால்பந்து லீக் போட்டியில், கே.ஆர்.சி., எப்.சி., மற்றும் ஏ.ஜே.கே., ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.
கோவை மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான கால்பந்து லீக் போட்டி, நவக்கரை ஏ.ஜே.கே., கலை அறிவியல் கல்லுாரியில் நடக்கிறது.நேற்று முன்தினம் மாலை நடந்த போட்டியில் கே.ஆர்.சி., எப்.சி., அணி 1 - 0 என்ற கோல் கணக்கில், ஏ.ஜே.கே., கலை அறிவியில் எப்.சி., அணியை வீழ்த்தியது. மாஷா, 56வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
மற்றொரு போட்டியில், ஏ.ஜே.கே., ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 6 - 0 என்ற கோல் கணக்கில், ராயல் எப்.சி., அணியை வீழ்த்தியது. ஏ.ஜே.கே., அணிக்காக சமீர் மற்றும் அஜய் இரண்டு கோல், சித்தார்த், சல்மான் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

