ADDED : டிச 31, 2024 07:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்: ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் பொறுப்பேற்றார்.
அன்னுார், சத்தி ரோட்டில், ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு பருத்தி ஏல விற்பனை நடைபெறுகிறது. கொப்பரை கொள்முதல் செய்யப்படுகிறது.
விவசாயிகளுக்கு விளை பொருட்கள் இருப்பு வைக்கவும், பொருளீட்டு கடன் பெறவும் கிடங்குகள் உள்ளன. இங்கு ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சரவணன், திண்டிவனம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுகா, பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சந்திரசேகரன் அன்னுாருக்கு மாற்றப்பட்டு, நேற்று பொறுப்பேற்றார்.