/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பேட்டரி வாகனங்கள் கிராமங்களுக்கு வழங்கல்
/
பேட்டரி வாகனங்கள் கிராமங்களுக்கு வழங்கல்
ADDED : ஜன 07, 2025 10:52 PM

கிணத்துக்கடவு,; கிணத்துக்கடவு அருகே, செங்குட்டைபாளையம், மூட்டாம்பாளையம் கிராமத்தில் குப்பை சேகரிக்க பேட்டரி வாகனம் வழங்கப்பட்டது.
கிணத்துக்கடவு ஒன்றியத்தில், வரதனுார் ஊராட்சிக்கு உட்பட்டு செங்குட்டைபாளையம் மற்றும் மூட்டாம்பளையம் கிராமங்கள் அமைந்துள்ளது. இங்கு அதிகப்படியான மக்கள் வசித்து வருகின்றனர்.
சுகாதாரம் பேணும் வகையில் வீடுகளில் இருந்து, துாய்மைப் பணியாளர்கள் வாயிலாக குப்பை சேகரம் செய்யப்படுகிறது. இந்நிலையில், 'கோவை ரோட்டரி ஐ கான் நிறுவனம்' மற்றும் சுவாமி சித்பவானந்த மெட்ரிக் பள்ளி சார்பில், 40 லட்சம் ரூபாய் மதிப்பில் குப்பையை வகைப் பிரிக்கும் வளாகம் அமைக்கப்பட்டு, பயன்பாட்டிற்க கொண்டுவரப்பட்டது.
மேலும், 6 லட்சம் ரூபாய் மதிப்பில், 2 பேட்டரி வாகனங்கள், அனைத்து வீடுகளுக்கும், 1,400 எண்ணிக்கையில் பச்சை மற்றும் சிவப்பு நிற பக்கெட்டுகள் வழங்கப்பட்டன. பள்ளித் தாளாளர் சுந்தர்ராஜ், கல்பனாதேவி ஆகியோர் பங்கேற்றனர்.

