தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தொடர்ந்து உரிமைத் தொகை பெற தி.மு.க.,வுக்கு ஆதரவு தாருங்கள்

 தொடர்ந்து உரிமைத் தொகை பெற தி.மு.க.,வுக்கு ஆதரவு தாருங்கள்

 தொடர்ந்து உரிமைத் தொகை பெற தி.மு.க.,வுக்கு ஆதரவு தாருங்கள்


ADDED : ஏப் 05, 2026 08:15 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2026 08:15 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்னூர்: 'மகளிர் உரிமைத் தொகை தொடர்ந்து கிடைக்க தி.மு.க.,வுக்கு ஆதரவு தர வேண்டும்,' என வேட்பாளர் பேசினார்.

அவிநாசி தொகுதி தி.மு.க., வேட்பாளர் கோகிலாமணி, நேற்று அவிநாசி ரோடு, ஓதிமலை ரோடு, தென்னம்பாளையம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

துண்டு பிரசுரங்களை விநியோகித்து அவர் பேசுகையில், ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை தொடர்ந்து கிடைக்க தி.மு.க.,வுக்கு ஆதரவு தாருங்கள். தி.மு.க., அரசு செயல்படுத்திய திட்டங்களால் தமிழகத்தில் உயர்கல்விக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து தேசிய அளவில் முதல் இடத்தில் உள்ளது,என்றார்.

இத்துடன் அன்னூர், குப்பனூர், பொகலூர், கணேசபுரம், அல்லிக்காரம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு கோரினார். வேட்பாளருடன் தி.மு.க., நகர செயலாளர் பரமேஸ்வரன், ஒன்றிய செயலாளர்கள் பழனிச்சாமி, தனபாலன், அறங்காவலர் குழு தலைவர் நடராஜன் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us