/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'சுப்ரீம் சூப்பர் செப்' சமையல் போட்டி
/
'சுப்ரீம் சூப்பர் செப்' சமையல் போட்டி
ADDED : மார் 18, 2026 05:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: காந்திபுரம், 100 அடி ரோட்டில், சுப்ரீம் மொபைல்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பர்னிச்சர் ஷோரூம் திறப்பு விழா நாளை நடக்கிறது.
இதை முன்னிட்டு, 'சுப்ரீம் சூப்பர் செப்' சமையல் போட்டி நேற்று நடந்தது. 25 பெண்கள் பல்வேறு உணவு வகைகளை தயாரித்து அசத்தினர். நடுவராக 'யூ டியூபர்' விஜி ஷரோன் பிலிப் பங்கேற்றார்.
போட்டியில் சமைக்க பயன்படுத்திய இண்டக் ஷன் ஸ்டவ், பாத்திரங்கள் மற்றும் உணவு தயாரிக்க தேவையான பொருட்களை, போட்டி முடிந்தவுடன் வீட்டுக்கு எடுத்து செல்ல சுப்ரீம் மொபைல்ஸ் நிறுவனம் அனுமதித்தது. போட்டியில் வெற்றி பெற்ற ஐந்து பெண்களுக்கு 'வேடியம்' மிக்ஸி பரிசாக வழங்கப்பட்டது.

