ADDED : ஏப் 06, 2026 08:12 PM

கோவை: கொங்குநாடு மருத்துவமனையில் அனைத்து அறுவை சிகிச்சைகளும் கோடை கால சிறப்பு சலுகை கட்டணத்தில் வழங்கப்படுகிறது.
மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் ராஜு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கொங்குநாடு மருத்துவமனை 375 படுக்கை வசதிகளுடன், அதிநவீன மருத்துவக் கருவிகள் மற்றும் அனுபவம் வாய்ந்த சிறப்பு நிபுணர்களைக் கொண்டு செயல்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் 'கோடைக்கால சிறப்பு சலுகை' வழங்கப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு அறுவை சிகிச்சை கட்டணம், மருந்துகள் மற்றும் மருத்துவர் கட்டணம் என அனைத்தும் உள்ளடங்கிய 'ஒட்டுமொத்த பேக்கேஜ்' முறையில் சிகிச்சை அளிக்கப்படும்.
கழுத்தில் கட்டி, டான்சில், ஹெர்னியா, அப்பன்டிக்ஸ் மற்றும் சுன்னத் உள்ளிட்ட சிறுவர்களுக்கான பொது அறுவை சிகிச்சைகள், பெண்களுக்கான தைராய்டு, மார்பகக் கட்டி, கர்ப்பப்பை கட்டிகள், குடும்பக் கட்டுப்பாடு மற்றும் கேன்சர் அறுவை சிகிச்சைகள், அல்சர், பைல்ஸ், ரத்தக்குழாய் அடைப்பு நீக்கம் மற்றும் பல்வேறு புற்றுநோய் அறுவை சிகிச்சைகள், மூளை மற்றும் நரம்பு மண்டல பாதிப்புகளுக்கான உயர் ரக சிகிச்சைகளும் பெறலாம். விவரங்களுக்கு: 70943 16000.
