/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இலைகளில் வெளிப்படும் 'சர்ரியலிச' ஓவியங்கள்
/
இலைகளில் வெளிப்படும் 'சர்ரியலிச' ஓவியங்கள்
ADDED : ஆக 24, 2025 06:58 AM

கோவை : கோவை, பீளமேடு கஸ்துாரி சீனிவாசன் ஆர்ட் கேலரியில், சர்ரியலிச பானி நவீன ஓவியங்களின் கண்காட்சி நடக்கிறது.
சென்னையை சேர்ந்த ஓவியர்கள் மதுமோகன், சீராளன் ஜெயந்தன் ஆகியோர் வரைந்த யதார்த்தம் மற்றும் இயற்கை சார்ந்த ஓவியங்கள், நவீன மற்றும் சர்ரியலிச பாணி ஓவியங்கள் என, 80க்கும் மேற்பட்ட ஓவி யங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்களை அதிகம் கவர்ந்துள்ளது.
ஓவியர் மது மோகன் கூறுகையில், ''மரத்தின் இலைகளை கருப்பொருளாகக் கொண்டு, சர்ரியலிச பாணி ஓவியங்களை வரைந்துள்ளேன். ஓவியங்களை புதிய கோணங்களில் ரசிப்பவர்களுக்கு இவை பிடிக்கும்,'' என்றார்.
ஓவியர் சீராளன் ஜெயந்தனிடம் பேசியபோது, ''நான் முறையாக ஓவியம் படிக்க வில்லை. ஆர்வம் இருந்ததால் ஓவியர்களின் உதவியுடன் வரைய கற்றுக் கொண்டேன். மான் களின் தோற்றம் மிகவும் பிடிக்கும். அதன் துள்ளல், அச்சம், மென்மை என, மான்களின் உடல்மொழியை கவனித்து, தனித்துவமான ஓவியங்களை வரைந்து இருக்கிறேன்,'' என்றார்.
காலை 10 மணி முதல் மாலை 6 மணி கண்காட்சி நடக்கிறது. நாளையுடன் (ஞாயிறு) முடிகிறது.

