/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுற்றுலா வளர்ச்சி திட்டத்துக்கு மருள்பட்டி குளத்தில் ஆய்வு
/
சுற்றுலா வளர்ச்சி திட்டத்துக்கு மருள்பட்டி குளத்தில் ஆய்வு
சுற்றுலா வளர்ச்சி திட்டத்துக்கு மருள்பட்டி குளத்தில் ஆய்வு
சுற்றுலா வளர்ச்சி திட்டத்துக்கு மருள்பட்டி குளத்தில் ஆய்வு
ADDED : ஏப் 28, 2025 05:05 AM

உடுமலை உடுமலை அருகேயுள்ள மருள்பட்டி குளத்தில், சுற்றுலாத்துறை சார்பில், வளர்ச்சித்திட்ட பணிகள் மேற்கொள்ள அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டது.
உடுமலை, கண்ணமநாயக்கனூர், மருள்பட்டி, உரல்பட்டி பகுதியில், 108.42 ஏக்கர் பரப்பளவில் குளம் அமைந்துள்ளது. உடுமலை நகரிலிருந்து, 8 கி.மீ., தொலைவில், கொழுமம் ரோட்டில் அமைந்துள்ள இக்குளத்திற்கு, பல்வேறு உள்நாடு மற்றும் வெளிநாட்டு பறவைகள் வருகின்றன. சுற்றிலும் அழகிய வேளாண் நிலங்கள், தென்னை மரங்கள் என, இயற்கை சூழலுடன் காணப்படுகிறது.
மேலும், இக்குளத்திற்கு அருகே புகழ்பெற்ற பழநி, திருமூர்த்தி அணை, அமராவதி அணை ஆகியவை உள்ளன. ஆண்டு முழுவதும் நீர் இருப்புடன் காணப்படும் இக்குளத்தில் படகு இல்லம், சிறுவர் விளையாட்டு பூங்கா, குளத்தைச் சுற்றிலும் நடைபாதை அமைத்தல், உணவகம், வாகன நிறுத்துமிடம் என சுற்றுலா மையமாக உருவாக்க, மருள்பட்டி மண் நீர்வளப் பாதுகாப்பு சங்கம் சார்பாக சுற்றுலாத்துறைக்கு கோரிக்கை அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, இக்குளத்தை சுற்றுலா மையமாக மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, திருப்பூர் மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்தகுமார் தலைமையில், அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது. பி.டி.ஓ., ஷெல்டன், ஆர்.ஐ., சரவணன் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

