நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
- நமது நிருபர் -:
அவிநாசி வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தின் பவர்ஹவுஸ் அங்கன்வாடி மைய பணியாளராக ஜோதி மணி என்பவர் பணிபுரிந்தார்.
'வாட்ஸ் அப்' குழுவில், ஜாதி தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை பதிவு செய்ததாக இவர்மீது, கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக, அவிநாசி குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர், புள்ளியியல் ஆய்வாளர் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், கலெக்டர் உத்தரவுப்படி, அங்கன்வாடி பணியாளர் ஜோதிமணி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

