/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெண் இறப்பில் சந்தேகம்; உறவினர்கள் சாலை மறியல்
/
பெண் இறப்பில் சந்தேகம்; உறவினர்கள் சாலை மறியல்
ADDED : செப் 15, 2025 09:23 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, ஜமீன் கோட்டாம்பட்டியை சேர்ந்தவர் மலர்விழி,26. இவர், சமையல் வேலைக்கு சென்று வந்ததால், குழந்தையை கவனிக்க முடியாமல் இருந்தார். அவரது கணவர் மணிகண்டன் மற்றும் குடும்பத்தினர், அவரை வேலைக்கு போக வேண்டாம் எனக்கூறியுள்ளனர்.
நேற்றுமுன்தினம், சமையல் வேலைக்கு சென்று வந்த மனைவியிடம், மணிகண்டன் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால், விரக்தியடைந்த மலர்விழி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
பிரேத பரிசோதனைக்காக அவரது உடல், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. மலர்விழியை அவரது கணவரே கொலை செய்து இருக்கலாம், அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, பெண்ணின் உறவினர்கள், அரசு மருத்துவமனை முன்பாக உடுமலை ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். 25 நிமிட போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போலீசார் சமரச பேச்சு நடத்தி, புகார் கொடுங்கள் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து, கலைந்து சென்றனர்.