UPDATED : மே 08, 2026 11:16 PM
ADDED : மே 08, 2026 10:44 PM

கோவை: காரமடை எஸ்.வி.ஜி.வி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பிளஸ் 2 பொதுத்தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
பொதுத்தேர்வில் மாணவி பிரத்திகா 595, ரக்ஷா 594, ஜெய்ஷா மற்றும் ஷிவானி ஸ்ரீ 593, நித்திஷ் 592 மற்றும் முகுந்தன் 591, கிரிஷ்டா சயோனா மற்றும் பூர்விதா 590 மதிப்பெண்களை பெற்றுள்ளனர். 283 பேர் தேர்வெழுதிய நிலையில், 500க்கும் மேல் 150 மாணவர்களும், 550க்கு மேல் 70 மாணவர்களும், 580க்கும் மேல் 15 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கணக்கு பாடத்தில் 4 பேர், வேதியியல் மற்றும் பிரெஞ்சு பாடத்தில் தலா 2 பேர், பொருளியல், கணக்குப் பதிவியல், கணினி பயன்பாடு, பொது இயந்திரவியல் தலா ஒருவர், நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கணினி அறிவியலில் 16 பேர், வேலை வாய்ப்புத்திறனில் 11 பேர், நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழில் 9 மாணவர்கள் 99 மதிப்பெண், ஆங்கிலத்தில் 8 பேர் 99 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
சாதனை மாணவர்கள் மற்றும் வழிநடத்திய ஆசிரியர்களை பள்ளியின் தாளாளர் பழனிசாமி, முதல்வர் சசிகலா, நிர்வாக அறங்காவலர் லோகு முருகன், செயலாளர் ராஜேந்திரன் பொருளாளர் ரத்தினசாமி, அறங்காவலர்கள் தாரகேஸ்வரி, வேலுச்சாமி, ராஜேந்திரன் மற்றும் நிர்வாக அதிகாரி சிவ சதீஷ்குமார் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
