/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுயம்புவாத பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
/
சுயம்புவாத பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : நவ 07, 2024 12:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவில்பாளையம்; கோவில்பாளையம் அருகே, குரும்பபாளையம், ஸ்ரீ வேதவல்லி சமேத சுயம்பு வாத பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், விமானம், மண்டபம் மற்றும் பரிவார சன்னதிகள் புனரமைக்கப்பட்டு திருப்பணி செய்யப்பட்டது.
கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் துவங்கியது. இன்று காலை 9 :45 மணி முதல் 10: 45 மணிக்குள், மூலவர், விமானம், சொர்க்கவாசல் விமானம், பரிவார மூர்த்திகள், கன்னிமூல கணபதி மற்றும் சுயம்பு வாத பெருமாள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது.
விழாவில் பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், சிரவையாதீனம் ராமானந்த குருபர சுவாமிகள் அருளுரை வழங்குகின்றனர்.