தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இனிப்பு வெல்ல பணியாரம்

 இனிப்பு வெல்ல பணியாரம்

 இனிப்பு வெல்ல பணியாரம்


ADDED : நவ 15, 2025 10:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 15, 2025 10:02 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவையான பொருட்கள்: n இட்லி மாவு - ஒரு கப் n நெய்-தேவையான அளவு n நாட்டுவெல்லம்- அரை கப் n தேங்காய்த்துருவல் - ஐந்து டீஸ்பூன் n முந்திரி, பாதாம் பருப்பு-தலா ஐந்து n ஏலக்காய்துாள் - கால் டீஸ்பூன் செய்முறை: நாட்டுவெல்லத்தைப் பொடித்து இலேசாக தண்ணிர் விட்டு அடுப்பில் மிதமான தீ வைத்து ஐந்து நிமிடம் வைக்கவும். வெல்லம் பாகாக தேவையில்லை. கட்டியில்லாமல் கரைந்தால் போதுமானது என்பதால், கவனமாக கரைந்ததும் கலக்கி இறக்குங்கள். அதன்பிறகு இட்லி மாவில் கரைத்த வெல்லப்பாகை ஊற்றி நன்றாக கலந்து தேங்காய்த் துருவல் சேர்த்து வைக்கவும். நாட்டு வெல்லத்தை கரைக்கும் போது பாகாகி விட்டால் மாவில் ஒட்டிக்கொண்டு உருண்டுவிடும். அதனால் வெல்லம் கரைந்ததும் எடுத்து கலக்க வேண்டும்.

வாணலியில் நெய் விட்டு உலர் பருப்புகளை சிறிதாக பொடியாக நறுக்கி பொன்னிறமாக வறுத்து வைக்கவும்.பிறகு வறுத்த பருப்புகள், ஏலத்தூள் சேர்த்து கலக்கவும். அடுப்பில் பணியாரக் கல் வைத்து சிறிய கரண்டியில் மாவை ஊற்றி அடுப்பை மிதமானத்தீயில் வைத்து இருபுறமும் இலேசாக எண்ணெய்விட்டு பொன்னிறமாக ஆகும் போது எடுக்கவும். சூடாக இருக்கும் போதே பரிமாறவும். அருமையான ஸ்வீட் பணியாரம் அழகாக ஒட்டாமல் வரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us