/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுற்றுலா, விளையாட்டுக்கு மாறுங்க... சைபர் குற்றங்களில் சிக்காதீர்! இளைஞர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு
/
சுற்றுலா, விளையாட்டுக்கு மாறுங்க... சைபர் குற்றங்களில் சிக்காதீர்! இளைஞர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு
சுற்றுலா, விளையாட்டுக்கு மாறுங்க... சைபர் குற்றங்களில் சிக்காதீர்! இளைஞர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு
சுற்றுலா, விளையாட்டுக்கு மாறுங்க... சைபர் குற்றங்களில் சிக்காதீர்! இளைஞர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு
ADDED : மே 12, 2025 11:24 PM

மேட்டுப்பாளையம் : ''ஸ்மார்ட் போன்களில் அதிக நேரம் செலவிடும் போது, நமக்கே தெரியாமல் கவன குறைவுகளால் போலி லிங்குகளை தொட்டு, சைபர் குற்றங்களில் இளைஞர்கள் சிக்கும் அபாயம் உள்ளது. இதனை தவிர்க்க சுற்றுலா, விளையாட்டில் இளைஞர்கள் கவனம் செலுத்தி ஸ்மார்ட் போன்கள் உபயோகிப்பதை குறைத்து கொள்ளலாம்,'' என மேட்டுப்பாளையம் போலீசார் அறிவுரை வழங்கி வருகின்றனர்.
ஸ்மார்ட் போன்களின் தொழில்நுட்ப வளர்ச்சியால் அதனை உபயோகிக்கும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஸ்மார்ட் போன்கள் உள்ள செயலிகள் வாயிலாக பல நன்மை கிடைத்த போதிலும், தீமைகளும் ஏற்படுகிறது. போலி லிங்க்குகள், போலி செயலிகள், என பலவற்றால் சைபர் கிரைம் மோசடிகளில் பலரும் சிக்கி, பணத்தை இழக்கின்றனர். பணம் இழப்பு ஒருபுறம் இருக்க, வெளிநாடுகளில் வேலை போன்ற போலி விளம்பரங்களை நம்பி சைபர் அடிமைகளாகவும் சிக்கி கொள்கின்றனர். இதனால் மன உளைச்சலுக்கும் உள்ளாகின்றனர்.
இதுபோன்ற சைபர் மோசடிகளில் சிக்கி கொள்ளாமல் இருக்க கோவை ரூரல் போலீசார் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு வழங்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து, இன்ஸ்பெக்டர் சின்ன காமணன் கூறியதாவது:-
ஸ்மார்ட் போன்கள் நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. இளைஞர்கள் ஸ்மார்ட் போன்களில் மூழ்கிவிடக்கூடாது.
அதிக நேரம் ஸ்மார்ட் போன்கள் பார்ப்பதால், அதில் வரும் போலி லிங்க்குகளை தொடும் வாய்ப்பு உள்ளது. இதனால் சைபர் குற்றங்களில் சிக்கி கொள்கின்றனர்.
ஸ்மார்ட் போன்களை கையாளும் போது கவனம் தேவை. சைபர் மோசடி நடந்தால் 1930 அழைக்க வேண்டும்.
இளைஞர்கள் போன் பயன்பாட்டை குறைத்து கொள்ள வேண்டும். அதற்கு இளைஞர்கள் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று இயற்கை காட்சிகளை ரசிக்கலாம், உடல் உழைப்பை அதிகப்படுத்தலாம், உடற்பயிற்சி, விளையாட்டில் அதிக கவனம் செலுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ''பள்ளி, கல்லுாரிகளில் சைபர் கிரைம்கள் குறித்தும், அதில் சிக்கி கொள்ளாமல் இருப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வகுப்புகள், வல்லுநர்களை கொண்டு நடத்த வேண்டும். போலீசார் இந்த முயற்சிக்கான முன்னெடுப்பை மேற்கொள்ள வேண்டும்.
வரும் காலங்களில் கொள்ளை சம்பவங்கள் என்பது ஆன்லைன் வாயிலாக தான் அதிகமாக இருக்கும். இப்போதே நாம் விழிப்புடன் செயல்படுவது மிகவும் அவசியம்,'' என்றனர்.